• சற்று முன்

    கோவில்பட்டி தனியார் லாட்ஜில் ஏசி மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

    கோவில்பட்டி புதுக் கிராமம் ஜெ.ஜெ நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் செல்வராஜ் (33). ஏசி மெக்கானிக் ஆன இவருக்கு திருமணமாகி நாகராணி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் கோவில்பட்டி ரயில்வே நிலையம் எதிரே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். இன்று காலையில் வெகு நேரமாக அறை திறக்கப்படாத காரணத்தினால் லாட்ஜ் ஊழியர்கள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அறையை திறந்து பார்த்தபோது செல்வராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad