கோவில்பட்டியில் வாறுகால் பாதாள குழிகளை மூடவலியுறுத்தி மலர் அஞ்சலி செலுத்தி நூதனப்போராட்டம்
கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் உள்ள சாலையில் வாறுகால் பாதாள குழிகள் மூடப்படமால் இருப்பதால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மட்டுமின்றி, தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் அந்த குழிகளை மூட பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது
.
இந்நிலையில் பாதாள குழிகளை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், அக்கட்சி கிளை செயலாளர் கருப்பசாமி தலைமையில் பாதாள குழிகளில் மலர் அஞ்சலி செலுத்தி, குழிகளை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், நகர் செயலாளர் ஜோதிபாசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமா சங்கர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி, 7வது வார்டு கிளை உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை