• சற்று முன்

    சென்னை வட பழனி தனியார் மருத்துவமனையில் சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்!


    சரவணபவன் ஹோட்டலின் உரிமையாளர் ராஜ கோபால் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள ராஜ கோபால் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று ராஜகோபாலின் மகன் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராஜ கோபால்தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இதையடுத்து, அவர் சிறைக்கு செல்வதற்கு முன்பாக சிகிச்சை பெற்ற வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad