• சற்று முன்

    5நிமிடங்களில் 150 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை புரிந்த மனைவிக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்


    வந்தவாசி தாலுகா கல்லாங்குத்து கிராம ஊராட்சி காவேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆணைக்குட்டி (வயது 30). இவரது மனைவி சத்யா (27). இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் தர்ஷினி (8) கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    கல்லாங்குத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் திருக்குறள் வாசித்து, ஒப்புவிப்பதை ஊக்குவித்து வந்துள்ளனர். இதில் மாணவி தர்ஷினி 1-ம் வகுப்பு படிக்கும் போது மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் 5 நிமிடங்களில் 27 திருக்குறள் ஒப்புவித்துள்ளார். இதைக்கண்ட ஆசிரியர்கள் தர்ஷினிக்கு கூடுதல் பயிற்சி அளித்துள்ளனர். அதைத்தொடர்ந்து தர்ஷினி 2-ம் வகுப்பு படிக்கும் போது 4 நிமிடங்களில் 110 திருக்குறள் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். இதையடுத்து அந்த மாணவிக்கு ஆசிரியர்கள் மேலும் பயிற்சி அளித்தும், அவரை ஊக்கப்படுத்தியும் உள்ளனர். இதனால் தர்ஷினி 5 நிமிடங்களில் 150 திருக்குறள் ஒப்புவிக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்து உள்ளார்.
    இதனை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் இயங்கி வரும் ‘டிரையும்ப் வேல்டு ரிகார்டு’ நிறுவனத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். இதையடுத்து மாணவியின் மேற்கண்ட சாதனையை உலக சாதனை நிறுவனம் அங்கீகரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் மாணவி தர்ஷினியின் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
    மாணவி தர்ஷினி 4.49 நிமிடங்களில் 150 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை புரிந்தார். இதனை அங்கீகரிக்கும் வகையில் ‘டிரையும்ப் வேல்டு ரிகார்டு’ நிறுவனத்தின் சார்பாக கலெக்டர் தலைமையில் மாணவி தர்ஷினியிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலும் கலெக்டர் கந்தசாமி, மாணவி தர்ஷினிக்கு பதக்கம், கேடயம் மற்றும் தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாணவி தர்ஷினி திருக்குறள் ஒப்புவிக்கும் போது மிகத் தெளிவாக வார்த்தைகளை உச்சரித்தார்.
    சென்னையில் இயங்கி வரும் ‘டிரையும்ப் வேல்டு ரிகார்டு’ நிறுவனத்தினர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மேற்கண்ட சாதனை நிகழ்வினை எந்தவித கட்டணமும் பெறாமல் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர். மேலும் கலெக்டர், மாணவி தர்ஷினியின் குடும்பத்தினர் சொந்த வீடு இல்லாமல் தனது தந்தை வழி தாத்தா வீட்டில் கூட்டு குடும்பமாக நெருக்கடியான இடத்தில் வசித்து வருவதை அறிந்து, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக மாணவி தர்ஷினி குடும்பத்திற்கு வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், கல்லாங்குத்து கிராம ஊராட்சி, காவோஜீப்பாக்கம் கிராமத்தில் முதல் - அமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்மோகன், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்  திருவண்ணாமலை  மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad