திண்டுக்கல் வட்டார காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள் நாணயங்கள் தபால் தலைகள் பழங்கால பொருட்கள் கண்காட்சி திருச்சியில் மூன்று நாட்கள் நடைபெற்றது
கண்காட்சியில் சென்னை காயின் சொசைட்டி செயலர் கார்த்திக் சந்திரசேகர் எழுதிய திண்டுக்கல் வட்டார காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
நூல் வெளியீட்டு விழாவிற்கு மதுரை அஞ்சல்தலை நாணயவியல் கழகத் தலைவர் பேராசிரியர் சுவாமியப்பன் தலைமை வகித்தார் .சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளரும் எழுத்தாளருமான கார்த்திக் சந்திரசேகரன் நூலினை வெளியிட காசு இயல் ஆராய்ச்சியாளர் ஆறுமுக சீதாராமன் நூலினை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சென்னை காயின் சொசைட்டி தலைவர் மணிகண்டன், திருவாரூர் நாணயவியல் கழக தலைவர் சுபஹத்துல்லா, திருப்பதி காயின் சொசைட்டி தலைவர் ராஜேஷ், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், தமிழ் காசுகள் சேகரிப்பாளர் பாண்டியன் ,ரமேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நூலாசிரியர் கார்த்திக் சந்திரசேகரன் தனது ஏற்புரையில் காசுகள் மூலம் வரலாற்றை அறியலாம் அவ்வகையில் ஒவ்வொருவரும் அவர்களது வட்டார காசுகளை அறிந்திருந்தால் அவர்களது பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் பொருளாதாரத்தை அறிய இயலும். பழனி வட்டாரத்தில் வெளிவந்த காசுகளில் முன்பக்கத்தில் செங்குத்தான வேலோன்றும் பின்பக்கத்தில் பழனி என்றும் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது பழனியில் ஆட்சி செய்த பாளையக்காரர்களால் வெளியிடப்பட்டதாக கருதப்படுகிறது. திருவாசி நாணயங்களில் கணபதி அமர்ந்த நிலையிலும் சுற்றிலும் பழனி என்ற தமிழ் எழுத்தும் காணப்படுகிறது மேலும் பல்வேறு வடிவங்களில் நாணயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதை தொகுத்துள்ளோம். காசின் முன்பக்கத்தில் இடது பக்கம் நோக்கி நிற்கும் மயில் திரிசூலம் சூரியன் சந்திரன் குத்துவாள் என பல்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வகை நாணயங்கள் திண்டுக்கல் வட்டாரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ளது. கதிரி பாளையக்காரர்களால் 14 வகை நாணயங்களும், விருப்பாட்சி பாளையக்காரர்களால் 15 வகையான நாணயங்களும் , பழனி பாளையக்காரர்களால் 97 வகையான நாணயங்களும் பல்வேறு குறியீடுகளுடன் சைவ, வைணவ மத அடையாளத்துடனும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. ஒவ்வொரு வட்டாரத்தின் நாணயம் முன் பக்கம் பின் பக்கம் உருவங்களும் எழுத்துக்களையும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளது திண்டுக்கல் வட்டார காசுகளை அதன் வரலாற்றினை உலக அளவில் அனைவரும் அறியும்வண்ணம் முதன் முதலாக ஆங்கில மொழியில் நூல் வெளிவருவது முதல் முறையாகும். ஒவ்வொரு சேகரிப்பாளர்கள் அவர்களது வட்டார நாணயங்களை கண்டறிந்து வரலாற்றை தொகுத்தால் நமது கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை உலகளாவிய அளவில் எடுத்துரைக்க முடியும் என்றார். முன்னதாக சங்க செயலர் குணசேகரன் வரவேற்க பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை