• சற்று முன்

    காட்பாடியில் கன்று விடும் திருவிழாவில் போலீசார் தடியடி


    வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் முதல்  மாடு விடும் திருவிழா அவனது வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது இந்த நிலையில்  நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் மாடு விடும் திருவிழா மாவட்டம் முழுவதும் நிறுத்தப்பட்டு இருந்தது அதனையடுத்து தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டது அதனை அடுத்து இன்று காட்பாடி அடுத்த பழைய காட்பாடி பகுதியில் இரண்டு பல் கொண்ட கன்றுகளுக்கான  கன்று விடும் திருவிழா  நடைபெற்றது 

    இதில்  மாவட்ட முழுவதிலிருந்தும்  மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா  இருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட  கன்றுகள் கலந்து கொண்டன விழா நடைபெற்று வந்தது இதனையடுத்து  விழாக்குழுவினர் வருவாய் துறையினரிடமும் காவல்  துறையினரிடமும் முறையான அனுமதி பெறாமல் கன்று விடும் விடும் திருவிழா நடத்தியதாக போலீசார் தடியடி நடத்தி மாடு விடும் விழாவை நிறுத்தினர்.இந்த விழாவை நடத்த முயன்றவர்களிடம் காட்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad