• சற்று முன்

    தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக ஜே .கே. திரிபாதி நியமனம்

    தற்போது தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால், புதிய டிஜிபி நியமனப் பணிகள் கடைசி கட்டத்தை எட்டின. பணிமூப்பு காரணமாகவும்  ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர்சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ்குமார் ஜா, தமிழ்ச்செல்வன், ஆசீஷ் பங்ரா, சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, பிரதீப் வி.பிலிப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகிய 14 பேரின் பட்டியலை தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அனுப்பியது.இந்நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியாற்றியவர்.என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad