மாலை முரசு செய்தியாளர் செந்தில்குமார் பலி : காயல் அப்பாஸ் ஆழ்ந்த இரங்கல்!
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
மாலைமுரசு தொலைகாட்சி தாம்பரம் செய்தியாளர் செந்தில்குமார் வண்டலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் செய்தியாளர் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் பலியான செந்தில் குமார் அவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன், 8 வயதில் ஒரு மகள் உள்ளன .விபத்தில் செய்தியாளர் செந்தில் குமார் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
செந்தில்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் உரிய நிதி உதவி வழங்க வேண்டும் மெனவும் செந்தில் குமார் அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளை தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை