திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஏரியில் 2 1/2 அடி கற்சிலை கண்டெடுப்பு
போளூர் பெரிய ஏரியில் சிறுவர்கள் தண்ணீரில் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ஏதோ ஒரு பெரிய கல் தட்டுப்பட்டு உள்ளது. உடனே அவர்கள் வெளியே எடுத்து பார்த்த போது 2½ அடி உயர ஆஞ்சநேயர் சிலை என்பது தெரியவந்தது. இதுகுறித்து போளூர் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மண்டல துணை தாசில்தார் முனிராஜ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் அங்கு சென்று சிலையை மீட்டு வந்து தாசில்தார் ஜெயவேலுவிடம் ஒப்படைத்தனர்.இதனையடுத்து அந்த சிலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை