Header Ads

  • சற்று முன்

    அதிவேக ரயிலில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்


    நேற்று இரவு மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் சேலம் அருகே வரும் பொழுது மெதுவாக வந்து கொண்டிருந்தது அப்பொழுது S5 ரயில் பெட்டியில் 2 மர்ம நபர்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார்கள். இதை கண்ட ஒரு பெண்மணி ( எனது தாய்) தலையை மறுபுறம் படுக்க வைத்துவிட்டு விழித்துக் கொண்டு அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார் அப்போது நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது நான் சற்று பட்டு வேட்டி முழுக்கை சட்டை அணிந்து இருந்ததால் எனது கழுத்தில் செயின் எதுவும் இருக்குமோ என்று  நினைத்து கொண்டு  சட்டை காலரை தூக்கி பார்த்தனர்.  சட்டென்று இந்த பெண்மணி எழுந்து என்ன வேண்டும் என்று கேட்ட உடன் வந்த 2 மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடி விட்டார்கள் பின் சேலம் வந்த பிறகு சற்று தூரத்தில் ரயில்வே காவல் படையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள் பணியில் இருந்த காவலர்கள் இடம் விவரத்தை கூறினோம் தாங்கள் முன்பே இந்த விவரத்தை கூறி இருக்கலாமே என்று கேட்டார்கள் அவர்கள் தப்பி விட்டார்கள் சார் என்று சொல்லி விட்டோம் சிறப்பான முறையில் காவல்துறை பாதுகாப்பு இருக்கிறது அதையும் மீறி சிலர் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் இப்போது அவர்கள் டார்கெட் சேலத்திற்கு முன்பாகவே உள்ளது சேலம் ஈரோடு வரையில் பாதுகாப்பு மிகவும் சிறப்பான முறையில் காவல்துறையில் ஈடுபட்டுள்ளனர் ஓசூரில் இருந்து கரூர் வரை நீடித்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் அசம்பாவிதத்தை தடுக்க துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு ஈடுபட்டால் நன்றாக இருக்கும் பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணங்கள் கிடைக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் 

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad