Header Ads

  • சற்று முன்

    தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


    தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

    குறிப்பாக தமிழகத்தில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்புதல் டெல்லியில் சமீபத்தில் கையெழுத்துதாகியுள்ளது.  பாண்டிசேரியில் 2 சதுர கிலோ மிட்டர் பரப்பும் தமிழகத்தில் விழுப்புரத்தில் 139 சதுர கிலோ மிட்டர் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்திருந்தது .மேலும் வாங்க கடலில் 1,654 சதுர கிலோ மிட்டர் பரப்பிலும் சேர்த்து 116 எண்ணெய் கிணறுகள் எடுக்க மத்திய அரசிடம்  வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு அனுமதி கொடுத்ததாக அதிகாரப்பூர்வமாக எந்தக் கடிதமும் வரவில்லை என்று தெரிவித்தார். அப்படியே கடிதம் வந்தாலும், இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பதிலளிக்கப்படும் என்றும் நாராயணசாமி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad