எட்டயபுரம் அருகே மின் வயர் அறுந்து விழுந்து 11 ஆடுகள் உயிரிழப்பு
எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டியில் மின் வயர் அறுந்து விழுந்ததில் 11 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. குளத்துள்வாய்பட்டியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி அய்யாசாமி. இவர் தினமும் ஊருக்கு வெளிப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு மாலையில் திரும்புவது வழக்கம்.நேற்று மாலை 3 மணிக்கு பலத்த காற்றும், இடி மின்னலும் தென்பட்டதால் அவர், ஆடுகளுடன் வீட்டுக்கு புறப்பட்டார். ஊருக்கு அருகே வந்த போது, மின்மாற்றியிலிருந்து செல்லும் மின் வயர் பலத்த காற்றுக்கு அறுந்து விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ஆடுகள் உயிரிழந்தது தொடர்பாக வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை