• சற்று முன்

    உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த உத்தப்ப நாயக்கனூர் ஊராட்சி முத்துவீரன்பட்டியைச் சேர்ந்தவர் ஐயாச்சாமி என்பவர் அவரது தோட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டம்  போதைப் பொருள்  தடுப்பு மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அய்யாசாமி தோட்டத்தை ஆய்வு செய்தபோது கனகாம்பரம் பூச்செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து போதைப் பொருள் தடுப்பு  பிரிவு ஆய்வாளர் ஸ்டீபன் ராஜ்  தலைமையில் ஐந்து பேர் கொண்ட  தனிப்படை போலீசார் ஐயாச்சாமியை கைது செய்து தோட்டத்தில் பயிரிடப்பட்ட 80க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை அழித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும் கஞ்சா செடி வளர்ப்பதற்கு சாமிக்கண்ணு என்பவரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் சாமிக்கண்ணுவை தேடி வருவதை அறிந்து தலை மறைவாகி விட்டார். தப்பியோடிய சாமிக்கண்ணுவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடம் மட்டுமே போதை தடுப்புபிரிவு மாவட்ட  கண்காணிப்பாளராக மணிவண்ணன் பொறுப்பேற்ற பின்னர் மதுரை மாவட்டத்தில் மட்டும் கஞ்சா வியாபாரி ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது அவர்களிடமிருந்து ரூ 35 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து இதில் 4 பேர் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது இதனால் மதுரை தென் மாவட்டங்களில் குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளதாக கண்காணிப்பாளர்  மணிவண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது 
    செய்தியாளர் :  காளமேகம் -  மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad