மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற அயப்பந்தாங்கல் ஓம் ஆன்பரசு சாமியின் வாக்கு பலித்துள்ளது
சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம்.இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.இந்த ஆலய சாமியார் ஓம் அன்பரசு கடந்த ஆண்டே மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்று அருள் வாக்கு அளித்து இருந்தார். அதேபோல் அதற்காக பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது.இந்த நிலையில் ஓம் அன்பரசு சாமியாரின் வாக்கு பலித்ததை அடுத்து ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.இது குறித்து கூறிய சாமியார் ஓம் அன்பரசு மோடி மீண்டும் ஆட்சி அமைக்க போவதாக காளி கூறியதாகவும் அதை தான் கூறியதாக கூறினார். மேலும் தற்போது தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு பிராத்தனை செய்து வருவதாகவும் இன்னும் 10 அல்லது 15 தினங்களில் மழை பெய்யும் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை