திருவாடானை மின்சார வாரிய அலுவலகத்தில் அலட்சியத்தால் 5 பசு மாடுகள் உட்பட ஒரு நாய் பலி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அஞ்சு கேட்டையில் இருந்து அழகமடை கிராமத்திற்கு மின்கம் செல்கிறது. இந்த மின்கம்பங்களில் 24 மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து எழும்பு கூடாக உள்ளது. இது குறித்து விவசாயிகள் கடந்த ஆறு வருடமாக புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
இந்நிலையில் நேற்று மாலை மாடுகள் இந்த ஆபத்தான மின் கம்பத்தின் அருகே நின்று மேய்ந்து கொண்டிருந்தபோது மின் கம்பம் திடீரென முறிந்து விழுந்ததில் அஞ்சுகோட்டை அருகே உள்ள மேல வயல் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (60), காந்தி (75) செல்ல மாரி (50) ராக்கப்பன் (75) போஸ் (70) இவர்களது பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு எத்தனை முறை புகார் கொடுத்தோம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இப்போது ஏன் வந்தீர்கள் என்று முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பதட்டம் நிலவுயது…இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இந்த மின் கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் எழும்பு கூடாக உள்ளது. விவசாய காலத்தில் வயலில் இறங்கவே பயமாக உள்ளது என்றும் எனவே இந்த ஆபத்தான மின் கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியதற்கு மின்சார வாரிய அதிகாரிகள் ஒன்றும் ஆகாது மின் இணைப்பு தானே துண்டித்து விடும் எவ்வித உயிர் பலியும் ஆகாது என்று அலட்சியமாக கூறியதாக தெரிவித்தனர். நாங்கள் இந்த பக மாடுகளை தங்களது குடும்பத்தின் அங்கத்தினராகவே வளர்த்து வருவதாகவும், இந்த வறட்சி காலத்தில் இந்த பசு மாடுகளை நம்பியே வாழ்த்து வருவதாகவும் கவலை தெரிவித்தனர். மேலும் இறந்து போன பசுமாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
கருத்துகள் இல்லை