Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது


    தமிழகத்தில் பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் உள்பட குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. இது குறித்த புகாரின்பேரில் நேற்று திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் மற்றும் அலுவலர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனையொட்டி அவர்கள் திருவண்ணாமலை பஸ் நிலையம், எல்.ஜி.எஸ். நகர், போளூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்று சோதனை நடத்தினர்.

    இதில் சுமார் 500 கிலோவிற்கு மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad