• சற்று முன்

    இடி தாக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரி உயர்மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு, 4 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு


    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகரில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்... இவர்கள் அருகில் உள்ள மலைப்பகுதியில் ஆடுகளை மேய்ப்பது, மூலிகை பொருட்களை சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நேற்று இக்கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் ஆறு பேர் கொண்ட குழுவினர்  மலைபகுதியில் ஆடு மெய்க்க சென்ற போது மழை பொழிந்த்தாகவும், அப்பொது இடி தாக்கியதில் 37 ஆடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது... தங்கள் வாழ்வாதரமாக இருந்த ஆடுகள் இறந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த செல்வம் ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கிராமத்தின் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார்...

    சம்பவமறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சுமார் 4 மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தி பெரும் போராட்டத்திற்கு பின் உரிய நிவாரணம் கிடைக்கும் என உறுதியளித்த நிலையில் உயர்மின் கோபுரத்திலிருந்து செல்வம் கீழே இறங்கினார்...


    செய்தியாளர் : V. காளமேகம் - மதுரை மாவட்டம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad