Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் 13 இடங்களில் மறுவாக்கு பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


    சென்னை: தமிழகத்தின் 13 வாக்குசாவடிகளில் வரும் 19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

    தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 திருவள்ளூர், கடலூர், ஈரோடு லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
    வரும் மே 19ஆம் தேதி, அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. அன்றைய தினமே இந்த 13 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று சத்யபிரதா சாஹு இன்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

    மொத்தம், 46 வாக்குப்பதிவு மையங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சந்தேகிப்பதாக இன்று காலை சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்தார். இதையடுத்து அங்கெல்லாம் மறு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் யாருமே கோரிக்கை விடுக்காமல், தேர்தல் ஆணையம் இவ்வாறு ஒரு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது சந்தேகத்திற்கிடமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். தேர்தல் அதிகாரியை மாற்ற அவர் கோரிக்கைவிடுத்தார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சத்யபிரதா சாஹு, மிகவும் தடுமாற்றம் காட்டுவதால், சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இந்த நிலையில் 13 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad