Header Ads

  • சற்று முன்

    தொண்டியில் 1008 விளக்கு பூஜை நடை பெற்றது


    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் 1008 குத்துவிளக்குப் பூஜை தொண்டி அருள்மிகு சிவகாமி அம்மாள் உடனாய  சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த விளக்கு பூஜை மாநில இந்து அமைப்பு செயலாளர் அர்ஜுன் சம்பத் மற்றும் மதுரை பாம்பாட்டி சித்தர் ஆகியோர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.  நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad