Header Ads

  • சற்று முன்

    காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வழிப்பறி கொள்ளை


    காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வழிப்பறி செய்யப்பட்ட 9 கோடி ரூபாய் மற்றும் 130 சவரன் தங்க நகைகள், சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் கூட்டாளி கிரண்ராவின் மேலாளர் கொண்டு வந்தது எனத் தெரியவந்துள்ளது.

    மதுரையில் இருந்து தயாநிதி என்பவர் 9 கோடி ரூபாய் மற்றும் 130 சவரன் தங்கநகைகளை காரில் எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். மதுரையில் நடைபெற்ற நகை கண்காட்சியில் காட்சிபடுத்தி விட்டு நகைகளையும் பணத்தையும் அவர் எடுத்துக்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது காரை பின் தொடர்ந்த மர்மக் கும்பல் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சோதனைச்சாவடியில் அவரை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. தாங்கள் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் என்று கூறி காரை சோதனையிட்ட அந்தக் கும்பல் காரில் இருந்த பணம் மற்றும் நகையை எடுத்துக் கொண்டதாகவும் சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்தில் வந்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறும் கூறிவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்தக் கும்பல் கொடுத்த விலாசம் தவறானது என்றும் நூதன முறையில் கொள்ளை நடைபெற்றதும் தெரியவந்ததையடுத்து அது குறித்து செங்கல்பட்டு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதனிடையே பணம் மற்றும் நகையை காரில் கொண்டு வந்தது பறி கொடுத்த தயாநிதி, தொழிலதிபர் கிரண்ராவின் மேலாளர் எனத் தெரியவந்துள்ளது. சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் தொழில் கூட்டாளியான கிரண்ராவின் போயஸ் தோட்ட வீட்டில் மண்ணில் புதைக்கப்பட்ட சிலைகளை அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad