Header Ads

  • சற்று முன்

    ஆவடி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 2அடுக்கு கட்டத்திற்கு சீல் வைப்பு- அதிகாரிகள் அதிரடி.


    ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி சாலையில் தரைத்தளம் மற்றும் இரு தளங்கள் கொண்ட ஒரு கட்டிடம் கடந்த 6 மாத காலமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு ஆவடி நகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட அனுமதி மாற்றும் கட்டிட அனுமதி பெறாமல் கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை அடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகார பகிர்வின் படி அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு கடந்த பிப்ரவரி 14ந்தேதி அன்று அனுமதி விண்ணப்பம் கோரி நகராட்சி சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் கட்டிடத்தின் உரிமையாளர் எவ்வித விண்ணப்பமும் நகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து கடந்த மார்ச் 23ந்தேதி ஆவடி நகராட்சி சார்பில் கட்டிடத்திற்கு பூட்டி சீல் வைக்கும் இறுதி அறிவிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலர்கள் அறிவிப்பின் பேரில் நகராட்சி ஆணையாளர் ஜோதிகுமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் சுப்புதாய், நகரமைப்பு ஆய்வாளர் கள் தினகரன், காமதுரை, நிர்மலா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், அதிகாரிகள் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும், ஆவடி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஆவடி நகராட்சி பகுதியான ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், அண்ணனூர், மிட்டினமல்லி, கோவில்பாதாகை, முத்தாபுதுப்பேட்டை, பருத்திப்பட்டு உள்ளிட்ட இடங்களில் 250க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் ஆவடி நகராட்சி சார்பில் திட்ட அனுமதியும், கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு, கட்டிட உரிமையாளர் உடனடியாக மேற்கண்ட அனுமதியை பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மீறும் பட்சத்தில் அனுமதின்றி கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad