திருச்சி கூவம் ஆறான உய்யகொண்டான் ஆறு
ராஜராஜ சோழனால் வெட்டப்பட்டது உய்யகொண்டான் ஆறு. மாயனூரில் காவேரி ஆற்றில் இருந்து பிரிந்து பெட்டவாய்த்தலை கோப்பு சோமரசம்பேட்டை புத்தூர் பாலக்கரை கீழ கல்கண்டார் கோட்டை ஆலத்தூர் காட்டூர் பாப்பா குறிச்சி சோழமாதேவி வழியாக வாழவந்தான் கோட்டை ஏரியில் உய்யகொண்டான் ஆறு முடிவடைகிறது . ஆற்றினால் 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாநகருக்குள் 19 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆறு செல்கிறது . ஊரகப் பகுதிகளில் ஆற்றில் வடிகால் வாய்க்கால் ஆக வரும் திருச்சிக்கு வரும் போது வீடு வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மருத்துவமனைகள் கழிவுகள் மற்றும் குப்பை கூளங்கள் உடன் கழிவு நீர்கள் உய்யக்கொண்டான் ஆற்றில் கலப்பதால் கூவம் ஆறாக மாறி வருகிறது.
இதனால் நீர்வாழ் உயிரினங்கள் பல மடிந்துவிட்டன. கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றத்துடன் வரும் வாயுக்கள் சுற்றுப்புறங்களில் குடியிருப்போருக்கு சுவாசக்கோளாறு ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் உய்யக்கொண்டான் ஆற்றினை தூய்மைப் படுத்துவதற்காக துண்டு பிரசுரங்கள் மற்றும் களப்பணி செய்து உள்ளார்கள். இருப்பினும் கழிவுநீர் கலப்பதை தடுக்க இயலவில்லை. சம்பந்தப்பட்ட மாநகர மாவட்ட பொதுப்பணித்துறை நிர்வாகத்தினர் கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து தடுக்க வேண்டும் என அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார் மேலும் தொழில் நிறுவனங்களும் மருத்துவமனைகளும் பொதுமக்களும் ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை