Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் குடிநீருக்கு தவிக்கும் மக்கள் - ஆனால் தோட்ட செடிகளுக்கு நீர் பாய்ச்சி அழகு பார்க்கும் தாசில்தார்


    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், திருவாடானை தாசில்தார் சேகர் கடந்த சில மாதங்களாக திருவாடானையில் பணியாற்றி வருகிறார். திருவாடானையில் கடந்த மூன்று வருடமாக போதிய பருவ மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவுவதால் திருவாடானை தாலுகாவில் சுற்றியுள்ள கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. குடி நீர் தட்டுப்பாட்டை போக்க வாரத்திற்கு ஒரு முறையாவது கிராம மக்கள் போராட்ட்டம் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.

    தற்பொழுதும் அது தொடர்ந்து வரும் நிலையில் தாசில்தார் சேகர் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் காலியாக கிடந்த இடைத்தை அடைத்து அதில் பல வகை பூ செடிகளை நட்டு அதற்கு தாலுகா அலுவலகத்திற்கு வரும் குடிநீரை பாய்ச்சி வருகிறார். இது பற்றி சமூக ஆர்வளர்கள் சிலர் பொது மக்கள் குடி தண்ணீருக்காக தவிக்கும் நிலையில் இப்படி குடி தண்ணீரை வீணாக்கலாம என்றும், இப்பொழு இந்த தாசில்தார் இருக்கும் வரை கவணிக்கப்படும் இந்த பூந்தோட்டம் இவர் மாறுதலாகி சென்றால் அடுத்து வரும் மதிகாரிகள் கவணிப்பார்களா என்பது கேள்விகுறியாக உள்ளது. இந்த பூந்தோட்டம் தனது சொந்த செலவில் வைத்தாகவும் கூறுவது வேடிக்கையாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்தார்கள்.

    கோடைகாலம் நடந்து வரும் நிலையில் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு வரும் பெரியவர்கள், பெண்கள் மற்றும் பொது மக்கள் பயன் படுத்த கழிப்பறை கிடையாது. மேலும் தாகம் எடுத்தால் குடிக்க தண்ணீர் கிடையாத என்பது வேதணையான ஒன்று. உடன் ஒரு குடி தண்ணீர் சிண்டக்ஸ் டாங்க் வைத்து காட்சி பொருளாக உள்ளது. அதிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது. அப்படி இருக்கும் நிலையில் இந்த பேந்தோட்டம் தேலையா? என்றும் அதற்கு நிலழ் தரும் மரங்களை நட்டிருந்தால் குடிதண்ணீராவது வீணாகமல் இருந்திருக்கும் என்றம் தெரிவித்தார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்தார்கள்.


    செய்தியாளர் :  திருவாடானை - ஆனந்த் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad