Header Ads

  • சற்று முன்

    தொண்டி கடலில் கிடைக்கும் பிள்ளையார் சிலை ஐம்பொன் சிலையா ? கற் சிலையா ?



    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி கடற்கரையில் ஜெட்டி பாலத்தின் ஒரு தூணில் சுமார் 4 அடி உயரமான பிள்ளையார் சிலை ஒன்று தூணில் வைக்கப் பட்டுள்ளது. இந்த சிலையானது பல நாட்களாக உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மீனவர்கள் தெரிவிக்கையில் இந்த பகுதியில் இந்தத் தூணில் பிள்ளையார் சிலை இருப்பதால் நாங்கள் அருகில் செல்ல அச்சப்படுவதோடு எங்களது படகுவகுகளையும் நிறுத்த முடியாமல் உள்ளது. இது குறித்து தொண்டி கிராம நிர்வாக அலுவலர் நம்பு ராஜேஷிடம் தெரிவித்ததற்கு சம்பவ இடத்தை பார்வையிட்டு அதைப் பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி சென்றுவிட்டார். இதேபோல் ஏற்கனவே இப்பகுதியில் பகுதியில் சுமார் 2 அடி உயரம் உள்ள முனிவர் சிலை கண்டெடுக்கப்பட்டு உடன் அந்த கிராம நிர்வாக அலுவலர் சென்று கைப்பற்றி திருவாடானை தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சிலை இங்கு வந்து பல நாட்கள் ஆகியும் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்காதது வினோதமாக இருப்பதாகவும் நாங்கள் அந்த சிலையை மீட்டு கரைக்கு கொண்டு வந்தால் எங்கள் மீது சிலை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அதன் அருகிலேயே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளோம் என்றும் சொல்லப்படுகிறது மேலும் அருகில் சென்று பார்க்க முடியாததால் இது கல்லினால் ஆன சிலையை அல்லது ஐம்பொன்னால் ஆன சிலையை என்பதை அந்த சிலையயை கைப்பற்றி பார்த்தால் தான் தெரிய வரும் என்பதையும் மீனவர்கள் தெரிவித்தார்கள் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கைப்பற்றி பிள்ளையார் சிலையை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தார்கள்.

    செய்தியாளர் :  திருவாடானை - ஆனந்த் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad