• சற்று முன்

    தி.மு.க ஒரு கார்ப்ரேட் கம்பெனி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ம.க தலைவர் ராமதாஸ் கடும்தாக்கு.........


    சென்னை பெரம்பூர் தொகுதிககுட்பட்ட கொடுங்கையூரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் வட.செ. பாரளுமன்ற தே.மு.தி.க வேட்பாளர் திரு. மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் தொகுதி சட்டமன்றஅ.தி.மு.க வேட்பாளர் திரு.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து பா.ம.க தலைவர் மருத்துவர். திரு. ராமதாஸ் அவர்கள் இன்று பிரச்சாரம் வேற்கொண்டார். 

    அப்போது பேசிய அவர் திரவிட முன்னேற்ற கழகத்தினை கடுமையாக சாடினார். கலைஞர் திரு. கருணாநிதி மறைவிற்க்கு பிறகு தி.மு.க ஒரு கட்சி அல்ல அது ஒரு பன்னாட்டு நிறுவனம் போல் செயல்படுவாதவும் அதன் தலைவராக திரு.ஸ்டாலின் அவர்கள் உள்ளதாகவும் அதன் செயல் இயக்குநர்களாக அவருடைய மகன் மற்றும் மருமகன் ஆகியோர் உள்ளதாகவும் என்னை பற்றியும  என்னுடைய அரசியல் வாழ்ககை பற்றியும் திரு.ஸ்டாலின் அவர்கள் மிக தரக்குறைவாக பேசி வருவதாகவும் அதை பற்றி தாம் கவலை கொள்ள போவதில்லை எனவும் இந்த தேர்தல்தான் தி.மு.கவிற்க்கு கடைசி தேர்தல் எனவும் அதற்கான முடிவுரையை திரு. ஸ்டாலின் எமுதி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியில் வட.செ.பாரளுமன்ற வேட்பாளர் திரு.மோகன் ராஜ் அவர்களுக்கு முரசு சின்னத்திலும் பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் திரு.ஆர்.எஸ் ராஜேஷ் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களிக்கமாறு அவர் கேட்டு கொண்டார். 
    இந்த பொது கூட்டத்திற்க்கான ஏற்பாட்டினை பா.ம.க துனை பொது செயலாளர் வழக்கறிஞர் திரு.ராதா கிருஷ்ணன் செய்து இருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad