Header Ads

  • சற்று முன்

    இலங்கை கல்முனை சாய்ந்தமருது பகுதியில் குண்டுவெடிப்பு 15 சடலங்கள் கண்டெடுப்பு


    இலங்கை சாய்ந்தமருதுவில் நேற்று இரவு நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் 15 சடலங்களை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஆறு சடலங்கள் தற்கொலை குண்டுதாரிகளின் உடல்களாக இருக்கலாம் என்று போலிஸார் சந்தேகிக்கின்றனர். தெமடகொடவில் நடந்தது போல, பாதுகாப்பு பிரிவினர் இவர்களது இடத்தினுள் நுழைய முயன்றபோது, குண்டை வெடிக்க வைத்து தங்கள் குடும்பத்தினரோடு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நேற்று, சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

    அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினரால் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

    கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவலக்கடை பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு நிலைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர சோதனைகளில் மேலும் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாய்ந்தமருது மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தற்போது பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad