• சற்று முன்

    தமிழகத்தில் மூன்றாவது அணியா ?


    வர இருக்கின்ற மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு அணிகள் களத்தில் இருந்த நிலையில் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று சசிகலா தலைமையில் டிடிவி.தினகரன் முன்னிலையில் ஒரு வலுவான ஒரு கட்சி தமிழகத்தில் உலாவருகிறது. இந்த கட்சி எதிர் வரும் மக்களவை தேர்தலை தனித்து சந்திக்குமா என்று மற்ற கட்சிகளின் பார்வை அமமுக கட்சியின் மீது விழுந்துள்ளது.
    கூட்டணியை பொறுத்தவரையில் திமுக தெளிவாக முடிவடைந்த நிலையில் அதிமுக கூட்டணியில் சலசலப்புடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில் தேமுதிக முதலில் மதில் மேல் பூனை போல் திமுகவா அல்லது அதிமுக என்று எதிர்பார்த்த நிலையில் திமுக கூட்டணி முடிவடைந்த பிறகு அதிமுக வாசலில் தவமாய் தவம் இருந்தது முதலில் 7 தொகுதிகள் வேண்டும் என்று அதிகாரமாக கேட்ட தேமுக தற்போது கொடுக்கறதை கொடுங்கோ என்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட தேமுதிக 4 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ஜிய சபா போதும் என்று  தேர்தல் களத்தை சந்திக்குமா  அல்லது அமமுக அணியுடன் இணைந்து தேமுதிக,சமத்துவ  மக்கள் கட்சி , நாம் தமிழர் கட்சி, என ஓர் அணியில் நின்று தேர்தலை சந்திக்குமா என்று அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad