அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருவதாகக் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, மற்றும் அக்கட்சி நிர்வாகிகளுடன் மக்களவை தேர்தல் பணிகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியை கண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரண்டு மிரண்டு போய் உள்ளதாகவும் விமர்சித்தார். கூட்டணியை உடைக்க எதிர்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் பால் கெட்டுவிடும் என்று கூறிய அவர், கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார். கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் வலிமையான கட்சிகள் எனக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, கூட்டணி வலிமையை தேர்தல் வெற்றி மூலம் உணர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேர்தல் அறிவித்தால் ஒரு மாத கால அவகாசமே இருக்கும் என்று கூறிய முதலமைச்சர், காலம் கடத்தாமல் அனைவரது வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இன்னும் ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய இருப்பதாக குறிப்பிட்ட அவர், கூட்டணி முழுமையாக இறுதியானபின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து ஊழியர் கூட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது கட்சியும் வளரும், மாநிலமும் வளரும் என்பதால், ஒரு கல்லில் இரு மாங்காய் அடிப்பததற்கு சமம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தே முதிக தனித்து விடவேண்டிய கட்சி
பதிலளிநீக்கு