திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவிகள் போராட்டம் !
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து திருவண்ணாமலையில் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டம் செய்தனர். பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ படங்கள் எடுக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் போராட்டம் நடந்தது. பின்னர் மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை