Header Ads

  • சற்று முன்

    போரூர் அருகே குடோனில் கார்கள் எப்படி தீப்பிடித்தது?


    சென்னை:சென்னை போரூர் அருகே வாகன நிறுத்தும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்த சம்பவத்துக்கு, குப்பை கிடங்கில் பற்றிய தீயே காரணமா அல்லது மர்மநபர்களின் கைவரிசையா என்று போலீசார் குழம்பி உள்ளனர். போரூர் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் காலி மைதானம் ஒன்று உள்ளது. அந்த மைதானத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


    கால் டாக்சி ஒன்றில் தவணை முறையில் வாங்கி பின்னர் பணம் கட்டமுடியாத நிலையில் பறிமுதல் செய்யப் பட்டுள்ள 200க்கும் அதிகமான கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந் நிலையில் திடீரென அந்த வாகன நிறுத்துமிடத்தில் தீ பிடித்தது. மளமளவென பரவிய தீயினால் அங்குள்ள கார்கள் எரிந்தன. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மதுரவாயல், போரூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. கொழுந்துவிட்ட தீயில் இதுவரை 200க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. போரூர், மதுரவாயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே புகை மூட்டமாக காணப்படுகிறது. போக்குவரத்து பல இடங்களில் முன் எச்சரிகையாக நிறுத்தப்பட்டுள்ளன. வீடுகளில் உள்ள பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கார் கிடங்கிற்கு அருகே இருந்த குப்பை கிடங்கில் தீ பற்றி... பின்னர் அந்த தீ கார்களுக்கு பரவியதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad