Header Ads

  • சற்று முன்

    தன்னோடு கூட்டணிசேர யாரும் வராததால் அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் தினகரன் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி


    தன்னோடு கூட்டணிசேர யாரும் வராததால் அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் தினகரன் - இனி நான்தான் அதிமுக என சொல்லக்கூடாது– அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி கொலைப்பழி சுமத்தி வெளியேற்றிய வைகோவை ஸ்டாலின் மறந்துவிட்டாரா? –பாமக தலைவர் ராமதாஸ் மீதான விமர்சனத்திற்கு அமைச்சசர் பதில்  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேக் வழங்கியும் அன்னதானம் செய்தும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினார். 

    தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயக்குமாரிடம் அதிமுகவுடன் பாமக கூட்டணிவைத்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் குறைசொல்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பாமக இயக்கம் தொடங்கியதே சமூகநீதியை பெற்றுதருவதற்காகத்தான். அவர்களுடைய  69 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா.கொள்கை அளவிலேதான் இன்று இணைந்திருக்கின்றோம். தமிழக உரிமையை பெறுவதற்காகத்தான் இன்று ஒன்றிணைந்திருக்கின்றோம் என முதல்வரும்,ராமதாசும் சொல்லியிருக்கின்றார்கள். 

    ஒன்றிணைந்ததால் வெற்றிக்கூட்டணி உருவாகியுள்ளது என்கிற வேதனையில்தான் ஸ்டாலின் தன்னை மறந்து பேசிவருகிறார். வைகோமீது கொலைப்பழி சுமத்தப்பட்டு திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இன்று வைகோவை அவர்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் தற்போது கொலைப்பழி ஸ்டாலினுக்கு மறந்துவிட்டதா? ஏன பேசிய அமைச்சர் மக்களை சந்திக்க ஒத்த கருத்துமிக்க கட்சிகளுடன்தான் இன்று கூட்டணி வைத்திருக்கின்றோம். மக்கள் நலம் சார்ந்த நிலைப்பாடு உள்ள கட்சிகள்தான் கூட்டணி வைத்துள்ளது. இதை மக்களே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு மாறாக அதிமுக பாமக,பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு தினகரனோடு சேர யாரும் தயாராக இல்லை அதனால் சேர்ந்தவர்களை விமர்சனம் செய்கிறார். ஜெயலலிதாவே பாஜகவோடும் பாமகவோடும் கூட்டணிசேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றுளளார்.ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றவே கூட்டணிசேர்ந்துள்ளோம்.

    இன்றைக்கு தனிக்கட்சி ஆரம்பித்துள்ள தினகரன் அதிமுகவினரை அழைத்தும் யாரும் செல்லவில்லை. இவருடைய கட்சியும் அங்கீகாரம்இல்லை சின்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.குழப்பமான சூழலில் கட்சி உள்ளதால் யாரும் அவருடன் கூட்டணிக்கு செல்லவில்லை. அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை. அதிமுக கொடியும்சின்னமும் எங்கிருக்கின்றதோ அங்குதான தொண்டர்கள் இருப்பார்கள்.இனியும் நான்தான் அதிமுக என தினகரன் சொன்னால் மக்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.தொடர்ந்து 40தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நடிகர்கள் கமல்,சீமான் குறித்த கேள்விக்கு யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்களுக்கு திட்டங்களை சொல்லவேண்டும்,தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் எதுவுமே இல்லாமல் போட்டியிட்டால் மக்களைபார்க்கலாம் அதன்பின்னர் வீட்டுக்கு சென்றுவிடுவார்கள் என பேசிய அமைச்சர் அதிமுகவுடன் மேலும் கட்சிகள் இணைவதற்கு முதல்வரும் துணைமுதல்வரும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள் என தெரிவித்தார்.


    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி யிலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இன்று தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் கேக் வெட்டி குழந்தைகளுக்கு கொடுத்து மேலும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினார் அன்னதானம் வழங்கியபோது அமைச்சர் குழந்தைகளுடன் அமர்ந்து அவரும் உணவருந்தி பிறந்தநாளை கொண்டாடினார் இதனால் ஆதரவற்ற குழந்தைகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் இவ்விழாவில் அதிமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் காட்டாக நிறுவனர் ஆகியோர் சேர்ந்து பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad