காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் - 2 லட்ச ரூபாய் நிதி உதவி
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சவலாப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சுப்பிரமணியன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, ரூபாய் 2 லட்சத்திற்கான நிதி வழங்கினார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதில் மாவட்டம் கோவில்பட்டி சவலப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சுப்பிரமணியனும் ஒருவர். அவருக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 20 லட்ச ரூபாய் நிதி உதவி செய்யப்பட்ட நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவருவும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சுப்பிரமணியன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, ரூபாய் 2 லட்சத்திற்கான நிதி வழங்கினார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, எம்.எல்.ஏக்கள் ஐ.பெரியசாமி, அனிதா.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் மற்றும் திமுகவினர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : சிவராமன் - கோவில்பட்டி
கருத்துகள் இல்லை