• சற்று முன்

    சின்னத்தம்பி: சிக்கலுக்கு தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் தவிப்பு


    சின்னத்ததமிழ்நாட்டையும் தாண்டி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் சின்னத்தம்பி யானை, இப்போது பல்வேறு தரப்பிலும் பேசப்படுவதுடன், பல ஆச்சரியங்களையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.



    அதே நேரத்தில், தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டை அருகே தங்கியிருக்கும் சின்னத்தம்பியை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் அதிகாரிகள். சின்னத்தம்பி, கோவை மாவட்டத்தின் ஆனைக்கட்டி வனப்பகுதிகளில் தொடர்ந்து சுற்றி வந்தது. அந்தப்பகுதிகளில் பன்நெடுங்காலமாய் யானைகள் வலசை சென்று கொண்டிருந்த பாதைகளில் பல கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், ஆன்மிக நிறுவனங்கள், செங்கல் சூளைகள் எல்லாம் தோன்றி விட்டன. காடுகள் துண்டாக்கப்பட்டதால், ஊரினைக் கடந்துதான் மற்றொரு காட்டுப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டன யானைகள்.
    இப்படித்தான் காட்டினை ஒட்டிய விவசாய நிலங்களுக்கு யானைகள் வர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் சின்னத்தம்பி கூட்டத்தோடு வந்து கொண்டிருந்தது. ஆண் யானைகள் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் கூட்டத்தில் இருந்து விலகி தனியாக வாழும். அப்படி சின்னத்தம்பியும் தனியாக வலம் வர ஆரம்பித்தது. தொடக்கத்தில் கொஞ்சம் பயிர் மேய்ந்துவிட்டு சென்றுவிடும்.

    ஆனால் நாளாக நாளாக விவசாய நிலத்தில் பெரும் சேதம் விளைவிக்க ஆரம்பித்துவிட்டதாக அந்தப் பகுதியில் வாழும் ஒரு சாரார் புகார் தெரிவித்ததால் சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்ட வனத்துறை முயற்சித்தனர். சின்னத்தம்பி ஊருக்குள் வரும் பொழுதெல்லாம் பெரும் சத்தம் எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் அதை துரத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad