Header Ads

  • சற்று முன்

    இராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிக்கு தடை


    இராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. மணல் திருடர்களால் அரசுத்துறை அதிகாரிகள் பலர் தூக்கத்தை தொலைத்தனர். ஆனாலும் மணல் திருடர்களின் ஆட்டம் தொடர்கதையாகவே இருந்தது. இந்நிலையில் கடலாடி அருகே உள்ள கடுகுசந்தை கிராமத்தில் தனியார் மணல்குவாரி ஒன்று சவுடு மணல்குவாரி அனுமதியுடன் நடைபெற்று வந்தது. இந்த தனியார் மணல் குவாரிக்கு இப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடலாடி வட்டாட்சியர் முத்துலட்சுமியிடம் புகார் தெரிவித்தனர். வட்டாட்சியரின் உத்தரவின்படி துணை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது சவடு மணல் அனுமதியுடன் விளை நிலங்களில் மணல் அள்ளுவது தெரியவந்தது. உடனடியாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அள்ளும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தனியார் மணல் குவாரிக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை விதித்தது. மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    செய்தியாளர் : கேப்டன் -பாலா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad