Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளின் மெத்தன போக்கு



    குண்டும், குழியுமாக உள்ள செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

    செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண்மலை முருகன் கோயில், முறையாறு, அம்மனூர் ஆகிய பகுதிகளில் கஜா புயலின்போது பெய்த மழையால் சாலை பழுதடைந்து, குண்டும், குழியுமாக மாறியது.

    இந்தச் சாலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிகளவிலான வாகனங்கள் திருவண்ணாமலையை நோக்கி வருவதால், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல், அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்துகளைச் சந்திக்கின்றன. மேலும், வாகனங்கள் பழுதடைகின்றன. சாலை பழுதடைந்துள்ள பகுதிகளில் அந்தப் பகுதி மக்கள் மண் கொட்டி சாலையை தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். எனவே, செங்கம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் மண்மலை முருகன் கோயில், முறையாறு, அம்மனூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்க திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

     திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad