• சற்று முன்

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வீரர்கள் வரலாற்று சாதனை


    மெல்பர்னில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

    மகேந்திர சிங் தோனி 87 ரன்கள் அடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவருக்கு பக்கபலமாக 57 பந்துகளில் ஏழு பௌண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார் கெதர் ஜாதவ். 231 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றலாம் என்ற எண்ணத்தோடு இலக்கை விரட்டத் துவங்கியது இந்தியா. ரோஹித் ஷர்மா 9 ரன்களுக்கும், ஷிகர் தவான் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 62 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    விராட் கோலி ஆட்டமிழந்ததும், தோனியும் கேதர் ஜாதவும் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad