மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற் சங்கங்கள் போராட்டத்தில்
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற கோரியும், பொதுத்துறைகளின் பங்கு விற்பனைகளை கைவிட வலியுறுத்தியும் மற்றும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் (9-ந்தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., டி.யு.சி.சி., எஸ்.இ.டபிள்யூ., எல்.பி.எப். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாடு முழுவதிலும் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் என பல்வேறு சங்கங்களில் உள்ளவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், போக்குவரத்து, மின்வாரிய சங்கங்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் மட்டும் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களுடன் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை செய்தியாளர் முர்த்தி
கருத்துகள் இல்லை