Header Ads

  • சற்று முன்

    இழப்பீடு வழங்காததால் திருவண்ணாமலையில் அரசு பஸ் ஜப்தி


    விபத்தில் உயிரிழந்த டிரைவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் திருவண்ணாமலையில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. திருவண்ணாமலை அருகே வாசுதேவன்பட்டு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). இவர் காரம், இனிப்பு பலகாரம் ஏற்றி செல்லும் சரக்கு ஆட்டோவின் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி இவர் சரக்கு ஆட்டோவில் அவலூர்பேட்டை கொட்டப்பட்டு கிராமத்தின் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பஸ் சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


    இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் நடராஜனின் மனைவி ஆதிலட்சுமி இழப்பீடு வழங்கக்கோரி திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி விசாரணை நடத்திய நீதிபதி, விபத்தில் உயிரிழந்த நடராஜன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்து 55 ஆயிரத்து 647 இழப்பீடு வழங்க சேலம் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்

    ஆனால் சேலம் போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க காலதாமதம் ஏற்படுத்தி வந்துள்ளது. தற்போது வட்டியுடன் ரூ.12 லட்சத்து 57 ஆயிரத்து 948 இழப்பீடு வழங்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இழப்பீடு வழங்க காலதாமதம் செய்து வந்ததால் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று மதியம் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர் - திருவண்ணாமலை - மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad