• சற்று முன்

    செங்கம் அருகே பிரியாணி சாப்பிட்ட வாம் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்த 77 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர்


    செங்கம் அருகே பிரியாணி சாப்பிட்ட வாம் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்த 77 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கம் அருகே உள்ள பொறையாறு, அரட்டவாடி ஆகிய இடங்களில் வாம் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமாக மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 77 பள்ளி மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    இந்த மாணவர்கள் நேற்று திருவண்ணாமலை தொண்டு நிறுவனத்தில் நடந்த புத்தாக்க பயிற்சியில் பங்கேற்றனர். அங்கு வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினர். இரவு அனைத்து மாணவர்கள் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள் உருவானது. இதையடுத்து அனைத்து மாணவர்களும் செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad