Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணிய கால பூஜை வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


    திருவண்ணாமலையில் நடக்கும் உற்சவங்களில் சிறப்பு வாய்ந்தது, உத்தராயண புண்ணியகால பூஜை. இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணிய கால பூஜை வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


    திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணியகால பூஜை திருவண்ணாமலை தலத்தில் ஆண்டு தோறும் 7உற்சவங்கள் நடைபெறுகின்றன. இதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது, உத்தராயண புண்ணியகால பூஜை ஆகும். இது 10 நாட்கள் நடைபெறும் விழா. மார்கழி மாதத்தின் கடைசி 9 நாட்களும் தை மாதத்தின் முதல் நாளும் இந்த 10 நாள் பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணிய கால பூஜை வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் உற்சவர், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அதன் பிறகு உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் மேளதாளம் முழங்க வருகை தந்து தங்ககொடி மரத்தின் அருகே எழுந்தருள்வார்கள்.அதன் பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க உத்தராயண புண்ணியகால பிரமோற்சவ கொடியேற்றும் விழா நடைபெறும். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்து அண்ணாமலை யாருக்கு அரோகரா என்று கோஷம் எழுப்புவார்கள். இந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இதைத் தொடர்ந்து 10 நாட்களும் பிரமோற்சவ விழா நடைபெறும். காலையிலும், மாலையிலும் உற்சவர் சந்திரசேகரர் மாடவீதியில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலையில் 9 மணிக்கும், மாலையில் 7.30 மணிக்கும் இந்த மாட வீதி உலா நடைபெறும். 10-வது நாள் அதாவது தை மாதம் 1-ந்தேதி (ஜனவரி 15-ந்தேதி) உத்தராயண புண்ணியகால பூஜையின் நிறைவு நாளாகும். ஆனால் உத்தராயண புண்ணிய காலம் அன்று முதல் தொடங்குகிறது.

    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad