Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை அருகே தண்டராம்பட்டு சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியில் கொடுமை செய்து கொலை செய்த காமுகன் கைது


    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள தென் முடியனூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அன்புகுமாரி, இவர்களுக்கு கீதா (10) என்ற மகளும் பிரபு (8) என்ற மகனும் இருந்தனர். கணவன், மனைவி இருவரும் விவசாய கூலித்தொழிலாளி என்பதால், சிறுமி கீதா, அதே கிராமத்தில் வசிக்கும் தாய்வழி பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள கரும்புத்தோட்டத்தில் சிறுமி கீதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் சிறுமி பிணத்தை பார்வையிட்டனர். சிறுமியின் கழுத்து மற்றும் பிறப்புறுப்பில் ரத்தகாயங்கள் இருந்தது.

    அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் சிறுமி அணிந்திருந்த மூக்குத்தியும் திருடப்பட்டிருந்தது. திருவண்ணாமலை எஸ்.பி. சக்கரவர்த்தி, கூடுதல் எஸ்.பி. வனிதா, டி.எஸ்.பி. ஹேமசித்ரா, தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோரும் அங்கு வந்து கீதா உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ஜெசி அழைத்து வரப்பட்டது. அது கொலை நடந்த இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தொலைவு ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையே போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிறுமி கீதாவை அதே கிராமத்தை சேர்ந்த விவசாய கூலிதொழிலாளி கணேசன் (60) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பியது தெரியவந்தது. செங்கம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசாரும், தண்டாரம்பட்டு இன்ஸ்பொக்டர் பாண்டி தலைமையிலான மற்றொரு தனிப்படை போலீசாரும் கணேசனை பல இடங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், செங்கம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த ஒரு பஸ்சில் அமர்ந்திருந்த கணேசனை, டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    கணேசனை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் எஸ்.பி. சக்கரவர்த்தி தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொடூர சம்பவம் தென்முடியனூர் கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


    திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad