டைனோசர்களின் கல்லறையை ஆடு மேய்ப்பவர் கண்டறிந்தார்
தனது இறந்துபோன குடும்பத்தினர் புதைக்கப்பட்டுள்ள கல்லறைக்கு செல்லும் வழக்கமான வழியில் ஒருநாள் செல்லும்போது எதேச்சையாக ஆடு மேய்ப்பவரான டுமங்வ் தைபெயேகா என்பவர் 200 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்களின் புதைபடிமங்களை தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கண்டறிந்தார்.
"என்னுடைய கொள்ளு தாத்தா-பாட்டிகள் இறந்ததும் இந்த இடத்தில்தான் புதைக்கப்பட்டனர். அவர்களுடைய கல்லறையையும், அது இருக்கும் இடத்தையும் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமை" என்று 54 வயதாகும் டுமங்வ் கூறுகிறார். தனது கண்டுபிடிப்பிற்கு பிறகு அவர் தனது ஊரில் ஹீரோ போல பார்க்கப்படுகிறார்.
"ஒருநாள் கல்லறைக்கு செல்லும்போது, ஒரு மிகப் பெரிய எலும்பை பார்த்தேன். அதற்கு முன்புவரை நான் அவ்வளவு பெரிய எலும்பை பார்த்ததில்லை. எனவே, அதை வேறு யாராவது ஒருவரிடம் காண்பிப்பதுதான் சரியானது என்று முடிவு செய்தேன்."
எங்களது ஊரில் டைனோசர்களின் மீது அதிக பிரியம் கொண்டவராக கருதப்படும் ஓய்வுப்பெற்ற ஜேம்ஸ் ரலேன் என்பவரிடம் அதை காண்பித்தேன்.
"1982ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை படிக்கும் வரை நான் டைனோசர்கள் என்பவை வெறும் கட்டுக்கதை என்ற முன்னோர்களின் கூற்றையே நம்பி வந்தேன். அந்த புத்தகத்தை படித்த பின்பு டைனோசர்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடங்கினேன்."
"அப்படிப்பட்ட நான் எனது வீட்டுக்கு அருகே டைனோசர்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் மிகப் பெரிய ஆதாரத்தை கண்டறிந்தது எனக்கு எவ்வளவு உற்சாகத்தை அளித்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன்."இந்த கண்டுபிடிப்பின் மூலம் எங்களைப் பற்றியும், எங்களது மிகச் சிறிய கிராமம் குறித்தும் உலகம் முழுவதும் தெரியவருவது மட்டுமல்லாமல், இதுகுறித்து புத்தகங்களும் எழுதப்படும்."
"எங்களது கிராமம் வளர்ச்சி அடைவதற்கு அது வழிவகுக்கும்" என்று தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாத அவர் விளக்கினார். டைனோசர்களின் புதைகுழியை கண்டறிந்து உலகிற்கு சொல்லியவர்களில் மூன்றாவது மற்றும் கடைசி நபர், அந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஆரம்ப பள்ளியின் புவியியல் ஆசிரியரான தெம்பா ஜிகாஜிக்க என்பவராவார். "அவர்கள் இருவரும் மிகப் பெரிய எலும்புத்துண்டுகளை என்னிடம் கொண்டு வந்தபோது, அது புதைபடிமமாக இருக்க வேண்டுமென்று நான் சந்தேகித்தேன்" என்று அவர் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை