சென்னை வில்லிவாக்கம் விபச்சாரத்துக்கு அழைத்து கத்தியை காட்டி மிரட்டி தொழில் அதிபரிடம் வழிப்பறி செய்த இரு தம்பதிகள் கைது.

பொன்னேரியை அடுத்த கும்முடிபூண்டி எளாவூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் வ(40),ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். போரூரில் உள்ள தனது நண்பர் பார்க்க நள்ளிரவு 2.30 மணி அளவில் கும்முடிபூண்டியில் இருந்த போரூர் செல்லும் வழியில் ரெயில்வே மேம்பாலம் அருகில் சென்ற பொழுது இளம்பெண் ஒருவர் காரை வழிமறித்து உல்லாசமாக இருக்கலாம் என அழைத்துள்ளார். இதனால் சபலத்திற்கு உள்ளான விஸ்நாதன் சம்மதிக்கவே அந்த இளம்பெண் அவது தோழியையும் அழைத்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த விஸ்வநாதன் காரின் கதவை திறந்துள்ளார். அப்பொழுது சற்றும் எதிர்பாராமல் இரண்டு இளைஞர்கள் காரின் பின்புற சீட்டில் அமர்ந்து விஸ்வநாதன் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடம் இருந்து ஜெயின்,பிரேஸ்லைட்,மோதிரம், செல்போன் மற்றும் பணம் பத்தாயிரம் பறித்து உள்ளனர். பின்னர் தப்பினால் போதும் என்று அங்கிருந்து சென்ற விஸ்வநாதன் பாடி மேம்பாலத்தில் இருந்த போக்குவரத்து போலிசாரிடம் தகவல் அளித்ததின் பெயரில் காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்து விரைந்து வந்த வில்லிவாக்கம் போலிசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற பொழுது மீண்டும் வேறு ஒருவரிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு இருந்த அந்த நான்கு பேரையும் கைது செய்தனர். விசாரணையில் ராஜமங்கலம் முதலாவது தெருவை சேர்ந்த சுகுமார் வ(25), அவரது மனைவி வரலட்சுமி(23) வால்டாக்ஸ் கொண்டிதோப்பு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (28)அவரது மனைவி ரேவதி (24) என்பது தெரியவந்தது.
இரவு நேரங்களில் மாதாவரம்,செங்குன்றம் சாலைகளில் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்ததாகவும், செல்போனையும் பறித்து விடுவதால் பாதிக்கப்பட்டோர் காவல்துறைக்கு தகவல் அளிக்கமுடியாமல் திரும்பி சென்றுவிடுவதாகவும் தெரியவந்தது. இவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : ஹரி பிரசாத்
கருத்துகள் இல்லை