Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் இரயில் நிலையத்தில் அட்டவடியாக பேசும் டிக்கெட் கொடுக்கும் அதிகாரி - கொந்தளிக்கும் பயணிகள்



    திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் அதிகாரியின் நக்கல் பேச்சியால் பயணிகள் அதிர்ச்சி இவர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படுமா ரயில்வே துறையின் உயர் அதிகாரிகள்

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது இங்கு காலை 8.30 மணிக்கு காட்பாடியிலிருந்து சேலம் வரை செல்லும் பேசெஞ்சர் தொடர்வண்டி வருவது வழக்கம்.  இந்த நிலையில் இன்று சேலம் மருத்துவமணைக்கு செல்ல பயணிகள் டிக்கெட் வாங்க சென்றனர் டிக்கெட் வாங்கிய பொழுது 9.40 மணிக்கு தொடர்வண்டி என்று சொன்னார் அதற்கு அந்த பயணிகள் இதற்கு முன்னாடி தொடர்வண்டி இல்லையா என்று கேட்ட பொழுது அவர் கூறிய பதில் இரண்டு வண்டியை விட்டுவிட்டுவா  உங்களுக்கு பதில் சொல்கிறேன் என்று நக்கலாக பதில் சொல்கிறார் 

    அதைப் பற்றி ஏன் சார் தெரியாமல் கேட்டால் பதில் இப்படி சொல்கிறாய் என்றால் நான் அப்படிதான் சொல்வேன் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று  கூறுகிறார்.  உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு ரயிலில் பயணம் செய்பவர்கள் அவசரமாக மருத்தவமணைக்கு பள்ளிக்கு வியாபாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை மனதில் வைத்து கொண்டு போக வேண்டும்  என்று நெஞ்சில் பட படப்போடு    வருகிறார்கள்  ஆனால் பயண சீட்டு வாங்கும்  போது நாகரிகமாக கூட பதில் சொல்ல தெரியாத அதிகாரியை அந்த இடத்தில் வைத்து கொண்டு அழகு பார்ப்பது இந்த மனித இனத்திற்கே அவமானம் ஆகும் ஆதலால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து பயணிகளின் கோரிக்கை ஆகும்.

     செய்தியாளர் : பிரபு 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad