அரசு மது பான கடையில் கடன் கொடுக்க மறுத்ததால் அங்கு பணிபுரியும் பணியாளரை தாக்க முயற்சி
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாச்சல் கிராமத்தில் இயங்கி வரும் மதுபான கடை எண் 11278 இங்கு விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் செட்டியார் இவரை மர்ம நபர்கள் சிலபேர் கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். கடன் கொடுக்க மறுத்ததால் கடை விற்பனையாளர் செட்டியாரை தாக்கி கடையின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 2 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை உடைத்தும் கடை விற்பனையாளரை உடைத்த பாட்டிலால் குத்தவும் சென்றுள்ளனர் இச்சம்பவத்தால் கடை மேற்பார்வையாளர் ராஜேஷ் கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் : நித்தியானந்தன்
கருத்துகள் இல்லை