முதலமைச்சர் உள்ளிட்ட எந்த பொறுப்புக்கு வந்தாலும் மக்களில் ஒருவராக பணியாற்றுவேன் - ஸ்டாலின்
முதலமைச்சர் உள்ளிட்ட எந்த பொறுப்புக்கு வந்தாலும் மக்களில் ஒருவராக இருந்து பணியாற்ற உள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 600க்கும் மேற்பட்டவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள் மற்றும் கேக்குகளை அவர் வழங்கினார். விழாவில் பேசுகையில் மக்கள் பணியாற்றுவதற்கான பொறுப்பை மக்கள் தனக்கு தொடர்ந்து வழங்கி வருவதாகக் கூறிய அவர், முதலமைச்சராக மட்டுமன்றி எந்த பொறுப்பிற்கு வந்தாலும் மக்களில் ஒருவராக இருந்து கடமையாற்றுவேன் என்றார். மத்தியிலும் மாநிலத்திலும் இரண்டு ஆட்சிகளையும் அடியோடு ஒழித்தால் தான் நாடு வளம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்...
செய்தியாளர் : கொடுங்கை - ஹரிபிரசாத்
கருத்துகள் இல்லை