Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே நள்ளிரவில் செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்


    கோவில்பட்டியையடுத்த பாண்டவர்மங்கலம் அன்னை தெரசா நகரில் சனிக்கிழமை இரவு செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். 

    கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் முருகன்(32). மாட்டு வியாபாரியான இவர், ஆடு மேய்க்கும் தொழிலும் செய்து வருகிறாராம். மது அருந்தும் பழக்கமுடைய இவர் அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாம். இதையடுத்து காவல் துறையினர் அவ்வப்போது இவரைக் கண்டித்து வந்தார்களாம். மேலும் இவர் மீது சிறு வழக்குகள் பதிவு செய்திருந்தார்களாம்.  

    இந்நிலையில் காவல் துறையினர் என் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாகக் கூறி, மந்தித்தோப்பு சாலை பாண்டவர்மங்கலம் அன்னை தெரசா நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான செல் போன் டவரில் சுமார் 60  அடி உயரத்தில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். 
    இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவரது உறவினர்கள் மற்றும் காவல் துறை ஆய்வாளர் ஆவுடையப்பன் ஆகியோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின், முருகன் கீழே இறங்கி வந்தார். அவரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

     செய்தியாளர்  - கோவில்பட்டி -சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad