• சற்று முன்

    கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூரில் வீடுகளில் தொடர் கொள்ளை - மக்கள் பீதி


    கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூரில் திருவேனி கார்டன் என்ற பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியை கவிதா என்பவர் வீட்டில் நேற்று இரவு நுழைந்த கொள்ளையர்கள் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் என 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள், ஓசூர் பகுதிகளில் சமீபகாலமாக கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகமாகி வருகிறது,மூன்று தினங்களுக்கு முன்பு ஓசூர் நேரு நகரில் பட்டப்பகலில் மூன்று வீட்டில் நுழைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், அதைத்தொடர்ந்து நேற்றிரவு திருவேனி கார்டன் குடியிருப்புக்குள்  நுழைந்த திருடர்கள் இரண்டு வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர் .


    அங்கு வீட்டின் உரிமையாளர் விழித்துக் கொண்டதால் அங்கிருந்து தப்பித்து அதே பகுதியில் உள்ள மூன்றாவது தெருவில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த தங்க  நகைகளையும் வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து கொண்டிருந்தபோது சத்தம் வருவதை கண்டு விழித்துக்கொண்ட வீட்டின் உரிமையாளர் ஆசிரியை கவிதா படுக்கை அறையை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார் அப்போது எதிரே நின்ற திருடன் அவர் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலியை பரித்துக்கொண்டு ஓடியுள்ளான் இதில் ஆசிரியை கவிதா திருடன் என்று சத்தம் கூக்குரலிட்டுள்ளார் குடியிருப்பு பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் ஒன்று சேர்வதற்குள் திருடர்கள் தப்பி ஓடி உள்ளார்கள், உடனே நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ஓசூர் நகர ஆய்வாலர் லட்சுமண்தாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து CCTV யில் பதிவாயிருக்கும் திருடர்களின் உருவ படங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார் மேலும் ஓசூர் பகுதியில் திருட்டு கொள்ளை சம்பவம் அதிகமாகி வருவதால் இவர்களை பிடிக்க ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்,

    இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    செய்தியாளர் : சி. முருகன் - ஓசூர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad