சோனியா காந்தி 72வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள், ரொட்டி காங்கிரஸ் உறுப்பினர்கள் வழங்கினர்
திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் சார்பில் பழங்கள் மற்றும் ரொட்டி வழங்குதல்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அன்னை சோனியா காந்தியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநிலத் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் வழிகாட்டுதலின்படி திருவண்ணாமலை பாராளு மன்ற தலைவர் ஸ்ரீநிவாஸ் பிரசாத் தலைமையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இனிப்புகள் மற்றும் பழங்கள், பிரட், வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வினோத்,நெப்போலியன், சுபேர்,அஸ்லாம் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் சபீர் நகர தலைவர் கிஷோர் பிரசாத் கமால்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் பல நிர்வாகிகளும் கலந்து கொண்டு அன்னை சோனியா காந்தின் பிறந்த நாளை சிறப்பித்தனர்.மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவச பொருட்கள் வழங்கியது நோயாளிகளின் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை