Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை அய்யங்குளத்தில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞரை வெட்டி சாய்த்தது


    திருவண்ணாமலையில் செல்லிடப்பேசி கடையில் வேலை பார்த்த சென்னையைச் சேர்ந்த இளைஞரை 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் இந்தியன் வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு எதிரே உள்ள செல்லிடப்பேசி ரீசார்ஜ் கடைக்கு சனிக்கிழமை மாலை 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. இந்தக் கும்பல் திடீரென கடை ஊழியரை சரமாரியாகத் தாக்கியது.

    இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க கடை ஊழியர் வெளியே ஓடினார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் கடை ஊழியரை அரிவாளால் வெட்டி, அவர் இறந்ததை உறுதி செய்துகொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது. தகவலறிந்த திருவண்ணாமலை டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் வந்து பார்த்தபோது கடை ஊழியர் இறந்து கிடந்தது தெரியவந்தது. சிசிடிவி கேமராவில் பதிவு: இந்த நிலையில், செல்லிடப்பேசி ரீசார்ஜ் கடைக்கு எதிரே உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கும்பல் நடந்து வந்து, ரீசார்ஜ் கடைக்குள் செல்வதும், சிறிது நேரத்தில் கடை ஊழியரை வெளியே இழுந்து வந்து சரமாரியாக வெட்டுவதும் பதிவாகி இருந்தது.

    சென்னை இளைஞர்: இதையடுத்து, போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த ஏழுமலை மகன் நாகராஜ் (25) என்பது தெரியவந்தது. மேலும், திருமணமாகாத நாகராஜுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் மின்வாரிய ஊழியர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம். இது நாளடைவில் தகாத உறவாக மாறியதாம்.

    சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தனிமையில் இருந்தபோது மின்வாரிய ஊழியரின் 10 வயது மகன் பார்த்துவிட்டாராம். இதனால் பயந்துபோன நாகராஜ், 10 வயது சிறுவனை கடத்திச்சென்று கொன்றுவிட்டாராம். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர், திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். 4 நாள்களுக்கு முன்பு செல்லிடப்பேசி ரீசார்ஜ் கடையில் பணிக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது. எனவே, 10 வயது சிறுவனின் உறவினர்கள் நாகராஜை நோட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  இந்த சம்பத்தால் திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

    திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

    4 கருத்துகள்:

    1. செய்திகளின் தரம். மிகவும் நன்று. வாழ்த்துக்கள். அருள். தினபூமி நாளிதழ். மாவட்ட நிருபர். கன்னியாகுமரி. 9003 737 554/77 08 23 23 67

      பதிலளிநீக்கு
    2. செய்திகளின் தரம். மிகவும் நன்று. வாழ்த்துக்கள். அருள். தினபூமி நாளிதழ். மாவட்ட நிருபர். கன்னியாகுமரி. 9003 737 554/77 08 23 23 67

      பதிலளிநீக்கு
    3. செய்திகளின் தரம். மிகவும் நன்று. வாழ்த்துக்கள். அருள். தினபூமி நாளிதழ். மாவட்ட நிருபர். கன்னியாகுமரி. 9003 737 554/77 08 23 23 67

      பதிலளிநீக்கு
    4. செய்திகளின் தரம். மிகவும் நன்று. வாழ்த்துக்கள். அருள். தினபூமி நாளிதழ். மாவட்ட நிருபர். கன்னியாகுமரி. 9003 737 554/77 08 23 23 67

      பதிலளிநீக்கு

    Post Top Ad

    Post Bottom Ad